தவம் இருக்கின்றேன்..

Photobucket
உன் முதல் பார்வையில் என் உயிர் குடித்தவனே
நீ வருவாயே இல்லை என் மீதம் இருக்கும்
உயிரையும் திருடி செல்வாயோ..?

உன் சொல்லில்தான் என் உலகம் பிறக்குமடா
விடியல் என் வாசல் தேடி வருமடா...
என் ஜீவன் இங்கே ஊசல் ஆடுதடா
நீயில்லாத உலகில் நான் உயிர்த்திருக்க மாட்டேனடா
நீ இல்லாத உறவொன்றை கனவிலும்
நினைக்க மாட்டேனடா...

என்ன செய்கிறாய் என்னவனே
என் புலம்பல் உன் காதுக்கு எட்டவில்லையா..?
உன் நினைவினில் மூழ்கி தவிக்கிறேன்
என்னை மீட்டு எடுக்க உனக்கு தோன்றவில்லையா.. ?

என் ஆயுளின் அந்தி வரை அன்பினின்
வளர்பிறையாக நீ வருவாயா.. ?
உன் ஆம் என்ற ஓர் பதிலுக்காக
தினம் தினம் தவம் இருக்கின்றேன்..


Photobucket

svr.pamini

by svrpamini:

Free Blog Templates