வெறுக்கிறேன்..

Svr.pamini
வார்தைகளாலோ கவிதைகளாலோ
கண்ணீராலோ சொல்லிவிட முடியாது
என் மனதின் ரணங்களை
உன்னை விட்டு மட்டும்தான் போகிறேன்
இந்த உலகத்தை விட்டு அல்ல
எங்கோ ஒர் மூலையில்
நீ நலமுடன் வாழ இறைவனை
வேண்டிய படி இவள்
காலங்கள் மாற உன்னை பற்றிய
நினைவுகளும் கால வெள்ளத்தில் கரைந்து போகும்
இன்றுடன் பாசத்தையும்
என்மேல் பாசம்
வைப்பவர்களையும் வெறுக்கிறேன்
சில நாட்கள் பாச மழையில்
என்னை நனையவைத்து விட்டு
பல நாட்கள் கண்ணீரில் என்னை
மூழ்க வைத்து விட்டு செல்கிறார்கள்

மனித ஜாதியே நான் உங்களை வெறுக்கிறேன்
என்னை மன்னித்து கொள்ளுங்கள்
அதனால் இன்றுடன் எல்லாவற்றுக்கும்
முற்றுப்புள்ளி வைத்து விட்டு
ஆசை பாசம் என்பவற்றுக்கு திரையிட்டு
வாழ்க்கை பாதையில் நான்...





svrpamini



என் கவிப் பூக்களை பறிக்காதீர்கள்....

svr.pamini

by svrpamini:

Free Blog Templates