உன் குரல் போதும்..






pamini



svrpamini




உன் குரலை கேட்டாலே
உதிரத்தில் அலையடிக்கும்..

உன் குரல் போதும்..
உயிரின் அணுவும் அதிரும்

எந்த பாட்டு கேட்ட போதும்
உந்தன் நினைவே நெஞ்சில் மோதும்..

என்ன வேலை செய்த போதும்
உன் குரல் மட்டும் எனக்குள் கேட்கும்

என் காதும் உனக்கு கருவறைதான்..
உன் குரலைச் சுமக்கும் பலமுறை..

என் கண்ணீர் துளிகள் உன் விரல் தேடி வழிகின்றன...
என் கனவுப்பூக்கள் உன் குரல் கேட்டு விரிகின்றன...

உன்னோடு பேசத்தானே நெருங்கி வருகிறேன்..
என் மறுதலித்து என் நெஞ்சை நொறுங்க செய்கிறாய்
என் வாழ்வின் இனியவனே?

pamini

svr.pamini

by svrpamini:

Free Blog Templates