மீண்டும் மழலையாக பிறந்திட வேண்டும்..

svr.pamini

தீய்க்கும் சோகங்களை கடந்து
உயிரை பிதுக்கும் வலிகளை தாண்டி
இன்பம் துன்பம் கோபம் ஆத்திரம்
எல்லாவற்றையும் நகர்த்தி விட்டு
என் நினைவுப் பறவை
காலச் சக்கரத்தை பின் நோக்கி பார்க்க பறந்திட
என் எண்ணச் சிறகுகள் மெல்ல மெல்ல விரிகின்றது.

ஆம்...!
என் தாய் மடியில் தலை சாய்த்து துயின்ற நாள்..
அன்னை அவள் அரவணைப்பில் இன்பங்களை
மட்டும் நுகர்ந்த பொழுதுகள்..
சோகங்கள் எனைத் தீண்டி விடமால்
கண் இமைக்காமல் அல்லும் பகலும்
அயர்ந்திடமால் அன்பாய் பார்த்திட்ட அன்னை..
குட்டிப் பட்டாம் பூச்சியாய் மண்ணில் வட்டமடித்து
வாழ்க்கையை ரசித்த மழலைப் பொழுதுகள்...
கண் முன்னே எட்டிப் பார்க்க
கண்களில் கண்ணீர் முட்டி மோதுகின்றது...

என் அன்னையவளை பிரிந்து-தேசம்
கடந்து வந்து தனிமையில் பொய் முகங்கள் ஏது..?
உண்மை முகங்கள் ஏது -என்று
அறியாமுடியாமல் இன்னும் மனதால்
மழலையாக வாழ்ந்து கொண்டு இருக்கின்றேன்..

சோகங்கள் அறியாது இன்பங்கள் மட்டும் நுகரும்
போட்டி பொறாமை வஞ்சகம் சூழ்ச்சி அறியாத
பாசங்கள் மட்டும் புரிந்த அந்த மழலையாக நான்
மீண்டும் பிறந்திட வேண்டும்........
என் அன்னை அவள் மடியில்
சுகமாய் துயின்றிட வேண்டும்.....
svr.pamini

svr.pamini

by svrpamini:

Free Blog Templates