
மனதினில் என் மனதினில் உந்தன் முகம் வந்து
ஏனோ ஏனோ என்னை கொல்கிறது..
காதலும் நீயேன வாழ்வும் நீயென
வாழ்க்கையை தொலைத்தேன் வாலிப வயதினிலே...
உறவுகள் இருந்தும் என் உயிர் நீயேன
உயில் எழுதி தரவா உயிர் ஓவியமே..
உறங்கா உன் நினைவுகள் உறக்கத்திலும் உளரலாய்
காற்றினில் கலக்குதடா காதல் வலி தந்தவனே..
என் கண்ணை பாரடா
என் இதயத்தின் வலிகள் இரு விழிகளிலும் தெரியுமடா
இதயத்தில் பூவாய் மலர்ந்தவனே..
ஏனடா என் இதயத்தை புயலடித்த தேசமாய் மாற்றினாய்..
காதல் என்னைவிட்டு பிரியவில்லை நீமட்டும் ஏனடா
என் காதலை விட்டு பிரிந்து செல்ல நினைக்கிறாய்..
என் காதலும் எங்கே என் கவிதையும் எங்கே
சொல்லிவிட்டு போ இல்லை
என்னை கொன்று விட்டு போ..
