
காதல் ஒரு பெரு விருட்சம் அதில் உன் அன்பு
ஒடியாத கிளை அதில்
காலம் தோறும் இளைப்பாறலாம்
என்று ஓடோடி வந்தேன் ....
வந்த பின்தான் தெரிந்து கொண்டேன்
அது நிஜம் அல்ல கனவு என்று...
ம்ம்ம்.. ம்ம்ம்.. ம்ம்ம்.. ¨
காதலிக்கும் போது தெரிவதில்லை
கனவுகள் கலைந்து விடும் என்று...
ஆனாலும் உனக்கு என் நன்றிகள்
இதுவரை உன் பாசம் என்னும் தோப்பில்
உட்கார இடம் தந்து காவல்காரனாய் இருந்தற்கு..
இன்று உன் கடமை முடிந்து விட்டது என்று என்னை
விரட்ட நினைக்கிறாய் போலும் ...
இவ்வளவு நாளும் உட்கார்ந்து இருந்தவளை எப்படி
உடனே வெளியேற சொல்வது என்று
நினைத்தா வார்த்தை என்னும் கோடாரியால்
என் மனதை தினம் தினம் துண்டாக்கிறாய் ....
என்னவனே... உன்னை விட்டு போக சொல் போகிறேன்
ஆனால் உன் அனுமதியின்றி உன் நினைவுகளை மட்டும்
உன்னிடம் இருந்து பறித்துசெல்கிறேன்..
