
கண்டு கொண்டேன் கண்டு கொண்டேன்
கண்மணியின் அழகினை கண்டு கொண்டேன்
சொல்லிடவே வார்த்தையில்லை
சொல்ல தமிழ் எனக்கு தமிழ் எனக்கு பத்தவில்லை
உன் முகம் தெரியும் உன் முகவரி தெரியாது
நான் என்ன செய்வேன் கண்களிலே
வில் வளைத்து காதல் அம்பு நீ விடுத்தாய்
கத்தி மூக்கால் இதயமதை குத்தி குத்தி காயம் வைத்தயாய்
உன் பாதி மலர்ந்த செந்தாமரை போன்ற
உன் உதடுகள் முத்தமிட வா வா என்று அழைத்தன
உன் நாடி மட்டும் கோடி பெறும்........!
வாடி விட்ட வண்ண மலர் மலர்வடையச்செய்ய
உன் ஒரு சாடை சிரிப்பு போதுமென்பேன் .........!
வட்டமதி முகத்திலே வந்துசெல்லும் முகில்
என சில கூந்தல் குழந்தயென தவழ்ந்து விளையாடும்
பாடும் மீன்கள் விழியிலே..
பதியும் முத்து உன் பற்களிலே..
வானத்து நிலவோ வையகத்து மலரோ
என்ன வென்று சொல்வேன் உந்தன்
அழகை தேவதையே.
