நண்பனே...

svrpamini

ஓ நண்பனே ..!!!
உறக்கத்தை மறந்த உன் கண்கள்
பூமியில் எதை தேடுகின்றன..?
புதைந்து போன வாழ்வையா..?
புதிர் போடாதே நேற்றைய கனவில்
நாளைய கற்பனையில் இன்றைய
வாழ்க்கையை தொலைத்து விட்டு
தேடினால் கிடைக்குமா நண்பனே.. ?

விளக்கொளியை கண்டு விரைந்து மடியும்
விட்டில் பூச்சி ஆகிவிடாதே நண்பனே..
தோல்வியை கண்டதும் தூக்கு கயிற்றை தேடாதே
அவ நம்பிக்கையை ஆறடிக்குள் புதைத்து விட்டு
தன்னம்பிக்கையை மன அரங்குக்குள் விதை..!!!

அந்த பூக்கள் பூப்பறிப்பவனை கண்டும்
புன்னகை பூக்கின்றன....!!!
மரம் வெட்டிகளுக்கு கூட அந்த மரங்கள்
நிழல் தருகின்றன ..!!!
அந்த கடலின் அலைகள் தோற்று போனாலும்
மீண்டும் கரையை அடைய போராடுகின்றன..!!!..

ஆனால் நீயோ உனக்கே பாரமாய் இருக்கின்றாய்
தோல்வியை கண்டதும் துவண்டு விடுகின்றாய்
இருட்டில் இருந்தது போதும் வெளியே வா
நாளைய பொழுது நிச்சயம் உனக்காய் விடியும்
நம்பிக்கையோடு நடை போடு
நாளை உலகம் உன் கையில்..!!!

Svr.pamini

svr.pamini

by svrpamini:

Free Blog Templates