கற்பனையில் வாழ்க்கை கலைந்துவிடும் என்று தெரிந்தும் கண்கள் கனவு தேடி பயணிக்கிறது.!
இதயமே இல்லாத உனக்கு என் காதல்தான் புரியப்போகின்றதா என் பாசம் கூட வேசமாகத்தான் தெரியும் ஒர் நாள் என் அன்பை புரிவாய் ஆனால் அப்போ நான் உன் அருகில் இருக்க மாட்டேன் கல்லறையில் உன் நினைவுகளை சுமந்த படி மரணித்து இருப்பேன்
நீ என் மீது வீசும்வார்த்தை கற்க்களால் என் இதயம் வெடித்து விடுகிறது இரக்கமில்லாத அரக்கன் நீயடா
என்னவனே தினந்தோறும் கண்களில் கனவு சுமந்து இதயத்தில் உன்னை வைத்து கொண்டு வாழ்க்கை என்னும் நரகத்தில் தினம் தினம் வாழ்ந்து கொண்டு இருக்கிறேன்
உன் நினைவுகளை தினம் தினம் சுமந்து இமைகளை வருத்தி இதயத்தை கிழித்து நான் பெற்ற குழந்தைகள் என் கவிதைகள். என்இனியவனே உன் இனிமையான நினைவுகளை கவிதையாக கோர்த்து என் மாலையாக கழுத்தில் அல்ல இதயத்தில் அணிந்து இருக்கிறேன் நீ என்னை மறந்து விடாதே நீ மறந்தால் கூட என் கவிதைகள் உனக்காக காத்திருக்கும் என் கவி வலையில் இதயம் பலமுறை வெடிக்குதே நீயில்லா வாழ்வை நினைக்கும் பொழுதே ஏனடா வதைக்கிறாய் எனை தினம் வார்த்தையால் கொன்றே சாகடிக்கிறாய் மனித நேயம் இல்லாதவனா நீ? உனக்காக கவிதை வரைந்தேன்.. என் எழுத்துக்கள் கூட உன்னை பற்றி எழுதியதால் வெட்கத்தில் தலை குனிகின்றது..!