
உன்னை சந்திக்கும் அந்த
திரு நாளை எண்ணினால்
என் மனதுக்குள் ஆயிரம் பட்டாம் பூச்சிகள்
அல்லவா இறக்கை முளைத்து
சிறகடித்து பறக்கின்றன ...
உன் பார்வைகளை நான் ஸ்பரிசிக்க வேண்டும்
உன் மூச்சு காற்றினை நான் சுவாசிக்க வேண்டும்
உனக்குள் என்னை தொலைத்து விட்ட
அந்த நாளை உன்னிடம் வார்த்தைகளால்
வடித்து கூறவேண்டும்..
நாதமாய் உன் குரல் ஓசை தினம்தோறும்
என் இதயத்துக்குள் மெட்டுக்கட்டி
இசைபாடிக் கொண்டு இருப்பதை வார்தைகளால்
உன்காதோரம் நான் கூறவேண்டும்..
உயிரே அன்று என் மனதுக்குள் காதலை
விதைத்து விட்டு சென்றுவிட்டாய்
அது இன்று மொட்டாக விரிந்து பூவாக மலர்ந்து
என் இதயத்துக்குள் பூகம்பத்தை அல்லவா
உண்டாக்கி விட்டது..
என் இதயமே நீ என்றுதான் வருவாயோ
உனக்காக தினந்தோறும் விழியில்
கண்ணீரோடு காத்திருக்கிறேன்