
ஆனால் உன் வார்த்தைகளால்
என் உணர்வுகள் மரணித்து விட்டது
இப்போது உயிர் உள்ள நடைப்பிணம் நான்..
ஆசைகள் எல்லாம் கனவுகளில் மட்டும்
நிஜங்களாய் நடப்பதும் தூக்கம் கலைந்தவுடன்
அனைத்தும் விடை பெற்று
மீண்டும் தூக்கம் வரும் போது
தொடர் கதையாக நடப்பதும்
என் வாழ்க்கையில் வாடிக்கையாகி விட்டது
கேள்விகள் யாவும் கனாக்களில் கேட்க
கண்ணீர்தான் பதிலாகி போனது....