
தினந்தோறும் கண்களில் கனவு சுமந்து
இதயத்தில் உன்னை வைத்து கொண்டு
வாழ்க்கை என்னும் நரகத்தில்
தினம் தினம் வாழ்ந்து கொண்டு இருக்கிறேன்.
அன்பே உன்னை மறக்க வேண்டும்
என்றுதான் தினமும் நினைக்கின்றேன்
ஆனால் உன் பார்வைகள் என் மேல்
விழுந்த அந்த நாளை ..
உனக்காய் நான் கவிதை எழுதிய
அந்தநாட்களையும் உனக்காக
ஒவ்வோர் நிமிடமும் இதயம் அனலாய்
கொதிக்க காத்திருந்த அந்த
இனிய நாட்களையும் சேர்த்து
மறக்கத்தான் நினைக்கிறேன் ஆனால் என்னால்
மறக்க முடியவில்லையே ..
