எனக்குள் வந்தவனே...

Svr.pamini
என் கனவில் தினம்தோறும்
மிதப்பவன் நீ..!
என் நெஞ்சில் வியாபித்து
இருப்பவன் நீ..!
என் உணர்வுகளை எல்லாம் ஆட்டிப்
படைப்பவன் நீ ..!
இப்படி நான் நானாக இல்லாமல்
நீயாக இருக்கும்போது
நீ மட்டும் எப்படி நீயாக இருக்கிறாய்..!

ஒருமுறையாவது நீ நீயாக இல்லமால்
நானாக இருந்து பார் அப்போதுதான்
என் காதலின் ரணம் உனக்கு புரியும் ..

அதற்காக நீ காலம் தாமதித்து
என்னை புரிந்து கொண்டால் நான்
கட்டம் போட்ட கல்லறையில் அல்லவா
துயின்று கொண்டு இருப்பேன் ..
அதற்காக இன்றே உன் காதலை
வந்து சொல்லி விடு எனக்குள் வந்தவனே..
Svr.pamini

svr.pamini

by svrpamini:

Free Blog Templates