உயிர் துடிக்குதடி..

svrpamini
பனிமலையில் சாரல் தூவுதே

துயரத்தின் வலியில் பேசுதே

விழிகளின் விம்பம்; மீதிலே

இடிந்து (நொருங்கி) வீழ்ந்தது மனசு


வார்த்தையில் வாசம் வீசுமா

மௌனத்தின் சத்தம் கேட்குமா

என்னோடு நீயும் பேசவே

காத்திருக்குமா பொழுது


பூக்களின் மொழியிலே - புல்லாங்குழல்

இசை பாடிப் பாடி மகிழுதே

வண்ணத்து பூச்சியெல்லாம் - வானவில்லில்

கோலம் போட்டு போட்டு சுத்துதே (தடி)


எந்தன் நெஞ்சுக்குள்ளே தீக்குச்சியாய்

எனை வாட்டி வாட்டி தீ மூட்டுகிறாய்

தனிமையின் கொடுமை தாக்கவே - ஏனடி

வலிகளில் விஷத்தை ஊற்றுகிறாய்


இது மரணமோ இல்லை ஜனனமோ

வலிகள் தான் பதில் சொல்லுமோ


நேசத்தால் சிலுவையில் அறைந்துவிடு – நீ

சுவாசித்தால் என்னைத் தூக்கிலிடு

கனவிலே தோன்றினால் ஆழக்

கல்லறையில் எனை புதைத்துவிடு

அடிநெஞ்சில் முள்ளானால் - ரோஜா

செடியில் என்னை கொழுவி விடு


மௌனப் பொழுதுகளில் உயிர் துடிக்குதடி

பார்க்கும் தூரத்தில் நிலா விழுகிறது.

காதல் தேசத்து அகதி...

svr.pamini


என் இதயத்துக்குள்

இன்னொரு இதயம்


சுகமாய் வீழ்ந்த


அந்த நொடிப் பொழுது




அவன் சுவாசம்


எனைத் தீண்ட


என் மனது காதலை


பூத்த அந்த நாழிகை




அவன் பார்வைகளால்


என் இதயத்துக்குள்


சித்திரம் வரைந்த


அந்த மணித்துளிகள்




அவன் நினைவுகள்


என் மனதுக்குள்


இறங்கிய தருணங்கள்




இவை எல்லாவற்றையும்


நினைத்திடும் பொழுது


அவன் நினைவுகள்


உயிர் பெற்று


என் பொழுதுகளை


அவிய வைத்து பசியாறிக்


கொள்கின்றது இரக்கமின்றி..




அவன் நினைவுகள்


என் இதயத்தை


தீண்டி விடாமல் வேலி


போடுகின்றேன் இருந்தும்




அவன் நினைவுகள்


இதயத்தை தாண்டி


என்னை முழுவதும்


ஆக்கிரமித்து படர்கின்றதே


ஒரு வேளை அவன் நினைவுகள்


பாதீனியம் போலவோ?


நான் அழிக்க அழிக்க


மீண்டும் முளைக்கின்றதே




என் காதல் தேசத்தில்


நான் மட்டும் தனியாக


அவன் நினைவுகளை


தினம் தினம் சுமந்து


காதல் அகதியாக வாழ்கிறேன் ...




ஒரு வார்த்தை சொல்லிவிடு

svr.pamini


உன் பேச்சினில் மயங்கியதால்
இன்று ஊமையாகி கண்ணீர் வடிக்கின்றேன் நானடா
காரணம் இன்றி கதறுகின்றேன்
காரணம் கேட்டால் சினக்கின்றேன்
உன்னை பல நேரம் நேசிக்கின்றேன்
சில நேரம் வெறுக்கின்றேன்
இருந்தும் உன் நினைவு என்னை ஆக்கிரமித்து
அட்டகாசம் பண்ணுதடா
இரக்கம் இல்லா அரக்கன் நீயடா
இருந்தும் உந்தன் பின்னால் என் நினைவு அலையுதடா
அலைபாயும் என் மனதில் உன் நினைவு
அலை அலையாய் வந்து முட்டி மோதுதடா
ஒரு வார்த்தை சொல்லிவிடுடா
உந்தன் உயிர் நான் என்று
எந்தன் ஜீவன் வாழ்ந்துவிடுமடா


svrpamini

மீண்டும் மழலையாக பிறந்திட வேண்டும்..

svr.pamini

தீய்க்கும் சோகங்களை கடந்து
உயிரை பிதுக்கும் வலிகளை தாண்டி
இன்பம் துன்பம் கோபம் ஆத்திரம்
எல்லாவற்றையும் நகர்த்தி விட்டு
என் நினைவுப் பறவை
காலச் சக்கரத்தை பின் நோக்கி பார்க்க பறந்திட
என் எண்ணச் சிறகுகள் மெல்ல மெல்ல விரிகின்றது.

ஆம்...!
என் தாய் மடியில் தலை சாய்த்து துயின்ற நாள்..
அன்னை அவள் அரவணைப்பில் இன்பங்களை
மட்டும் நுகர்ந்த பொழுதுகள்..
சோகங்கள் எனைத் தீண்டி விடமால்
கண் இமைக்காமல் அல்லும் பகலும்
அயர்ந்திடமால் அன்பாய் பார்த்திட்ட அன்னை..
குட்டிப் பட்டாம் பூச்சியாய் மண்ணில் வட்டமடித்து
வாழ்க்கையை ரசித்த மழலைப் பொழுதுகள்...
கண் முன்னே எட்டிப் பார்க்க
கண்களில் கண்ணீர் முட்டி மோதுகின்றது...

என் அன்னையவளை பிரிந்து-தேசம்
கடந்து வந்து தனிமையில் பொய் முகங்கள் ஏது..?
உண்மை முகங்கள் ஏது -என்று
அறியாமுடியாமல் இன்னும் மனதால்
மழலையாக வாழ்ந்து கொண்டு இருக்கின்றேன்..

சோகங்கள் அறியாது இன்பங்கள் மட்டும் நுகரும்
போட்டி பொறாமை வஞ்சகம் சூழ்ச்சி அறியாத
பாசங்கள் மட்டும் புரிந்த அந்த மழலையாக நான்
மீண்டும் பிறந்திட வேண்டும்........
என் அன்னை அவள் மடியில்
சுகமாய் துயின்றிட வேண்டும்.....
svr.pamini

தெருவோரத்தில் நான்..

svr.pamini

உலகம் புரியா சின்ன ரோஜா ஒன்று
வாழ்க்கை முள் நிறைந்த பாதை என்று தெரியாமல்
கோடி "கனவுகள் " ஏராளம் மனதில் வளர்த்து விட்டு
உன் வார்த்தைகள் கேட்டு அந்த பூவையின் "கனவுகள்"
ஒவ்வொரு இதழாக மண்ணில் உதிர்ந்து வீழ்ந்தது இன்று ..!

என் உணர்வுகளுக்கும் ஆசைகளுக்கும் விதையிட்டு
முளையாகி மரமாக வளரவிட்டவன் நீ
ஆனால் அதை இப்போது வெட்டி சாய்த்து விட்டாய்
வார்த்தை என்னும் ஆயுதத்தால்

நான் எத்தனையோ எதிர்பார்புக்களை சுமந்தேன்
ஒற்றை மரமான இவள் தோப்பாக மாறி பூமியிலே
வாழ வேண்டும் என்று எந்தனையோ கனவுகள்..
ஆனால் இன்று பட்ட மரமாக தெருவோரத்தில் நான் ...

svr.pamini
தொலைந்த கனவுகள்
துண்டிக்கப்பட்ட வார்த்தைகள்
சிதைக்கப்பட்ட ஆசைகள்
தொலைதுரமான வாழ்க்கை
இன்னல்கள் நிறைந்த வழிகள்
இது எல்லாம் ஏன் ?

அணையுமா?

svr.pamini

என் கண்ணில் காதல் நீர் ஊற்று
என் இதயத்தில் காதல் தீ
இது நான் இறந்தால்தான் அணையுமா?

உன் பக்தையாக நான்...



என் துன்பத்தில் இன்பமாக மலர்ந்தவனே

சோகங்கள் என்னை கோடி கோடியாக துளைத்தாலும்

என் இதயத்தை அம்பு கொண்டு தகர்த்தாலும்

எனக்காக நீ இருக்கின்றாய் என்று எத்தனை துன்பங்கள் வரினும்

அத்தனையும் சுகமாக ஏற்றுக்கொள்வேன்

உன்னோடு வாழும் அந்த அழகிய நாட்களை எண்ணியபடி

என் சோகங்களை மூட்டைகட்டி தூக்கி எறிந்துவிட்டு

என்றும் இவள் உந்தன் இவளாக

வாழ்க்கை பாதையில் பயணிக்கின்றேன் நான்

உன் அன்பை பார்த்து வியக்கின்றேன் நானடா

உன் அன்பு வரம் வேண்டி தினம் தினம்

உன் பக்தையாக நான் என் தெய்வமாக நீ

என் பார்வைக்குள் நீ




svr.pamini

கண்ணிமைக்காமல் உன்னை பார்த்து கொண்டு இருந்தேன்

என்ன அதிசயம் உன் விழிகளின் வழியே

என் விழிகளை நோக்கி உன் பார்வைக்கணைகள்

என்னை நோக்கி வரும் போது இனம் புரியாத ஏதோ ஒன்று

என் விழிகளுக்குள் வீழ்ந்து இன்பமாக தாக்கியது.

ஆனாலும் அந்த இம்சையான இன்பம் சில நொடிகள் தான்

உன் வார்த்தை அம்புகள் என்னை நோக்கி தாக்குகின்றது.

என் கண்களில் கண்ணீர் எட்டி பார்க்க துடித்தாலும்

உனக்கு அழுவது பிடிக்காது என்ற காரணத்துக்காக

என் கண்ணீரை கண்களுக்குள்ளேயே சிறை வைத்துக்கொள்கிறேன்.

ஆனாலும் இப்போது நீ என்னருகில் இருக்கும் ஒன்றே

எனக்கு கிடைத்த விலை மதிக்க முடியாத சொத்தாக

என் பார்வைகளில் உன்னை சேமிக்கிறேன்

இதுதான் காதலா.?


svr.pamini
பூவுலகில் ஒரு மொட்டாக நான் விழ்ந்து.
விடலையாய் ஆன
பின் என் கண் விழித்திரை
விம்பத்தில் உணர்ந்தேன் உன்னை.

உன்னை பார்த்தாலே எனக்கு
பேச்சும் வரவில்லை
மூச்சுக்கு என்னவாச்சோ தெரியவில்லை
நண்பனை கண்டவுடன் இதயத்தின் ஓர் விளிம்பில் ஒரு வித நடுக்கம்

ஆனால் உன்னை
கண்டாலே மூளைக்குள்
ஆயிரம் பூக்கள் பூக்கின்றன.
நீ பார்வைகள் உதி
ர்த்து விட்டு செல்கையில்
அது உடலை உருக்கி உயிரை அல்லவா கொல்கின்றது .!



svr.pamini

எப்போது எனக்குச்சுகந்திரம்?

svr.pamini
உன் நினைவுகள்
நாட்கள் பாராது..
நாழிகைகள் பாராது..
இரவு பகல் பாராது..
என்னை ஆக்கிரமித்து
உன்னை நோக்கி மெல்ல
மெல்ல நகர்கின்றது..

எப்படித்தான் என்னை
ஆக்கிரமித்துள்ள
உன் நினைவுகளை
கொன்று எனக்குச்சுகந்திரம்
வாங்கி கொடுக்க போகின்றேனோ.?
svr.pamini

கொடும் பெண்

svr.pamini


பொறுமைக்கு பூமாதேவி என்று
பொய் சொல்லி வாழ்ந்து விட்டார்கள்..
நிமிட நேரத்தில் உயிரை உறுத்தி எடுத்த
கொடும் பெண் நீயல்லவா..

svr.paminisvr.paminisvr.pamini






பெண்ணே...



Svr.pamini







நெஞ்சில் கனவில் நினைவில்

மேடையிட்டு என் இதயத்தில் இடம் பிடித்தவளே

மொட்டாக உன் இதழ் இமைகள் மூடிக்கொண்டு

இருக்கும் உன் மணிச்சர விழிகள்

என் மேல் மலர்ந்தால் போதும் வேறென்ன

வேண்டும் எனக்கு



svr.pamini

உன் இரு விழி

Svr.pamini





உன் இரு விழிப் பிரகாசம் கண்ட

ஆதவன் ஓடி ஒளிந்தான் மேல்த்திசையில்....

மங்கலாய் வான் மதி வெட்க்கி உனைப்பார்த்து

மூடினாள் முகம் கருமுகில் கொண்டு....
svr.paminisvr.paminisvr.paminisvr.paminisvr.pamini


என் வாழ்வும் எங்கே.?

Photobucket




பாசம் என்னும் பூந்தோப்பில்
காதல் என்னும் பூ
ஒருமுறைதான் பூக்குமா
தெரியவில்லை எனக்கு

ஆனால் மழையில்லாத நந்தவனமாய்
இருந்த வாழ்வில் நீ மழையாக வந்து
வரண்ட என் இதயத்துக்கு
நீர் ஊற்றி காதல் பூ பூக்கவைத்தாய்.!!!.

என் காதலை அடி மனதுக்குள்
ஆழ புதைத்து விட்டு
சாதாரண மனுசியாக வாழ நினைக்கின்றேன்..

ஆனால் உன் குரல் கேட்டால்
என் மனதுக்குள்
கோடி மத்தாப்பூக்கள் பூக்கின்றன!!!
வரும் காலத்தில் வேதனை என்னும் முட்கள்
என் மனதில் ரணங்களாய் குத்தும்
என்றும் தெரிந்தும் முட்கள் நிறைந்த
பாதையில்தான் நான் பயணிப்பேன்
என்று என் மனம் துடிக்கிறது..

வேதனைகள் மட்டும் சோதனைகள்
ஆகிப்போன வாழ்வில் சாதனைகள் செய்ய துடிக்கும்
இவள் வாழ்வில் மீண்டும் சோதனைகள்தான்
வாழ்க்கையாகி போகுமா.?
விடை தெரியாதா பதிலாகி போன
என் வாழ்வில் கேள்விகள் மட்டும்
வர்க்கத்தில் விரிகின்றது

வினாக்கள் யாவும் கனாக்களில் பதில் சொல்ல
என் காதலையையும் கனாக்களில் சொல்லிவிட்டு
காலத்தை கரைத்து கொள்கிறேன்
வரும் ஜென்மத்திலாவது
உன்னோடு நான் சேர்ந்து வாழ்வேனா...?

svr.pamini

என் குழந்தைகள்

svr


உன் நினைவுகளை
தினம் தினம் சுமந்து
இமைகளை வருத்தி
இதயத்தை கிழித்து
நான் பெற்ற குழந்தைகள்
என் கவிதைகள்...

svr.pamini

ஏன் ?

Svr.pamini

காலையில் பூத்த பூ மாலையாகும்
முன் வாடி மயங்கி விழுகுது ஏன் ?
நடமாடும் மொட்டாக உனை
கண்டுதான் பெண்ணே

svr.pamini

நண்பனே...

svrpamini

ஓ நண்பனே ..!!!
உறக்கத்தை மறந்த உன் கண்கள்
பூமியில் எதை தேடுகின்றன..?
புதைந்து போன வாழ்வையா..?
புதிர் போடாதே நேற்றைய கனவில்
நாளைய கற்பனையில் இன்றைய
வாழ்க்கையை தொலைத்து விட்டு
தேடினால் கிடைக்குமா நண்பனே.. ?

விளக்கொளியை கண்டு விரைந்து மடியும்
விட்டில் பூச்சி ஆகிவிடாதே நண்பனே..
தோல்வியை கண்டதும் தூக்கு கயிற்றை தேடாதே
அவ நம்பிக்கையை ஆறடிக்குள் புதைத்து விட்டு
தன்னம்பிக்கையை மன அரங்குக்குள் விதை..!!!

அந்த பூக்கள் பூப்பறிப்பவனை கண்டும்
புன்னகை பூக்கின்றன....!!!
மரம் வெட்டிகளுக்கு கூட அந்த மரங்கள்
நிழல் தருகின்றன ..!!!
அந்த கடலின் அலைகள் தோற்று போனாலும்
மீண்டும் கரையை அடைய போராடுகின்றன..!!!..

ஆனால் நீயோ உனக்கே பாரமாய் இருக்கின்றாய்
தோல்வியை கண்டதும் துவண்டு விடுகின்றாய்
இருட்டில் இருந்தது போதும் வெளியே வா
நாளைய பொழுது நிச்சயம் உனக்காய் விடியும்
நம்பிக்கையோடு நடை போடு
நாளை உலகம் உன் கையில்..!!!

Svr.pamini

காதலே என்னை மன்னித்து கொள்..

svr.pamini

சில நாட்களில் பிரிய போகும் என் உயிர்
பல நாட்களாய் தொடரும் உன் வெறுப்பு
"இரக்கமில்லா ."நீ..." இதயம் இல்லா "உன் காதல்..".
இவையொன்றும் எனக்கு வேண்டாம்..
நீயும் வேண்டாம் உன் காதலும் வேண்டாம்...
என் காதல் ஒன்றே எனக்கு போதும்..
காதலே இரக்கமில்லா என்னவனை
காதலித்தற்காக என்னை மன்னித்து கொள்...





PhotobucketPhotobucket



உன் காதல் வேண்டாம் பெண்ணே...

Svr.pamini

பெண் ;

உன்னைப்பார்த்த சில நொடியில்
என்னை மறந்து உன்னுள் தொலைந்தேன் நானடா
மீண்டும் மீண்டும் உன்னை பார்த்திட
ஏனோ என் கண்கள் துடிக்குதே
காதலும் நீயே எந்தன் வாழ்வும் நீயே என்று
என் இதயம் இதயம் ஏனோ சொல்கிறதே

என் உணர்வினில் கலந்து உயிரினில் மிதந்து
நினைவினில் துளிர்த்து என் காதலில் பிறந்தவனே
என் காதல் புரியவில்லையா?
அறிந்தும் அறியாதவனே
புரிந்தும் புரியாதவனே
புலம்புகின்றேன் புரியவில்லையா?
எந்தன் காதல் உனக்கு தெரியவில்லையா?

ஆண் ;
அறிந்தேன் பெண்ணே அறிந்தேன்
புரிந்தேன் கண்ணே புரிந்தேன்
புலம்ப வேண்டாம் பெண்ணே
உந்தன் காதல் வேண்டாம் கண்ணே
வரும் காலம் யாவும்
கண்ணீர் துளிகள் வரவாகுமே
துன்பங்கள் தொடராகுமே
இன்பங்கள் தொலைவாகுமே
உன் காதல் சில நாளில்
தேய் பிறையாகி போகுமே
என் காதலும் வேண்டாம் பெண்ணே
உன் காதலும் வேண்டாம் கண்ணே...

Photobucket

எனை ஆட்டி வைத்தாய் நீயே..



Svr.pamini



கண்டேன் கண்டேன் என் காதல்
பெண்ணின் அழகை கண்டேன்
சொன்னேன் சொன்னேன் என் காதலை சொன்னே
நான் பார்க்கும் போது பார்வையாகிறாள்
நான் பேசும் போது பேச்சாய்யாகிறாள்
அழகு விழிகளால் எனை சிறையெடுக்கிறாள்
புதிதாய் மலரும் மலரென எனை மாற்றினாள்
தொலையாமல் தொலைந்தேன் நானே
உறையாமல் உறைந்தேன் உன்னுள் நானே

Photobucket







உதிரம் கொதிக்கிறதே



svr.pamini




நீயாக வந்ததாய் நானக மாறினேன்
தீயாக தீண்டினாய் தொலையாமல் தொலைந்தே போனேனே
தொலைவாக நான் இருந்தாலும்
தொலை தூர பார்வையாய் உனை பார்க்கிறேனே

ஓ ஓஒ ஓஒ ஓஓஓ
சித்ததில் கலந்து நித்தம் நித்தம் நினைவினில் வந்து
யாதுமாகி என்னுள் நுளைந்து ஆட்டி வைத்தாய் எனை நீயே
ஓ ஓஒ ஓஒ ஓஓஓ

என்னுள் கலந்தாய் நீயே உன்னுள் உறைந்தேன் நானே
இரக்கம் காட்டி இதய வாசல் திறக்கமாட்டாயா
உதிரம் கொதிக்கிறதே உணர்வுகள் வெடித்து சிதறுதே
உயிரும் விடை பெற துடிக்குதே



உன் பாசம் எல்லாம் வேசமே..


svr.pamini
என் நிழல் என தொடர்வாய் என நினைத்தேன்
என் பகையென மாறினாய்....
பாசமாய் இருப்பாய் என நினைதேன்
அது வேசம் என சொல்லாமல் சொல்லிவிட்டு போனாய் ....

நான் நீயாகவும் நீ நானகவும் இருப்பாய் என நினைதேன்...
ஆனால் என் உயிர் வாங்கி போக வந்தவன்
நீ என்று அப்போது நினைக்கவில்லையே ....

பேசத்தெரிந்தும் ஊமையாய் மனதுக்குள்
குமுறி குமுறி கதறுகிறேன்...
பேதை இவள் தவியாய் தவிக்கிறாள் ...
வருங்கால வாழ்வை எண்ணி துடியாய் துடிக்கிறாள்
யார்தான் புரிவாரோ இவள் மனதை....

என் இரு விழிகள்...!

கற்பனையில் வாழ்க்கை கலைந்துவிடும்
என்று தெரிந்தும்
கண்கள் கனவு தேடி பயணிக்கிறது.!

தொலைந்து போனது வாழ்க்கை
என தெரிந்தும்
தொலைதுர பயணமாய் வாழ்க்கை நகருது..!

இதில் என்றோ ஒரு நாள் போகும் உயிர்
இன்று போனால் என்ன என்று கேட்கும் மனது
இவை எல்லாம் முற்று பெறும் நாளை

உன் குரல்

svr.pamini



முதல் முறை உன் குரல் கேட்ட..
அந்த நிமிடங்களில்! என்னை மறந்து
உன் குரலில் தொலைந்தே போனேன்..!
காற்றலை வழி வந்து என் காது வழி வீழ்ந்து
உன் குரல் தொடுத்த இனிமையான
அன்பான பண்பான வார்த்தைகள்

என்னில் புகுந்து இதயத்தை உனது வசமாக்கியது..!
உன் குரல் மட்டும் கேட்காமல் போய் இருந்தால்
என் வாழ்வின் அர்த்தம் புரியாமலே போய் இருக்கும்

பிரம்மன் படைப்பின் சிறப்பு படைப்பு நீயடா!
வர்ணிக்க வார்தைகள் தேடி அலையும் பேதை நானடா.!
உன் அன்பு சிறையில் சிறைப்பட்டு எனது மனம்!
விடுதலை பெற விருப்பமில்லாமல்..
உன்னுடன் இறுதிவரை ஆயுள் கைதியாக
வாழ அடம் பிடிக்கிறது...!

என் உறவென உனை மாற்றினாய்!
விழி வழியே உன் உருவம் நகல் எடுத்தது
நித்தமும் பார்க்க வைத்தாய்.!
என் இனியவனே உன்னிடம் அடிமைப்பட்டு
வாழ்ந்திட ஏங்குது.. இந்த பெண்ணின் மனம்.......!
Photobucket

என்னவனுக்காக...





வேசங்கள் நிறைந்த உலகில் பாசங்கள்
எல்லாம் வேசங்கள் என்று நினைத்தவள் மனதில்
நிஜங்களாய் நீ வந்தாய்..


காலந்தோறும் உன் அன்பை நான் சுவாசிக்க வேண்டும்
வாழ்வதானால் உன் அருகினில் வாழ வேண்டும்...
இல்லையேல் சாவதானால் உன் அருகினில் சாக வேண்டும்...
சோகம் என்னும் கடலுக்குள் மூழ்கிய என்னை
வாழ்க்கை என்னும் ஆனந்த கரையில்
வாழ வைக்க போராடுபவனே
உன் அன்பினில் என் தாயை காண்கிறேன்..


உன் கண்டிப்பில் என் ஆசானை பார்க்க்கிறேன்..
என் கஸ்டத்தில் தோள் கொடுக்கும் போது
ஒரு நல்ல நண்பனை காண்கிறேன்.
என்னோடு சண்டை பிடிக்கும் போது
உன்னை குழந்தையாய் காண்கிறேன்..

இப்படி காணும் யாவிலும் நிறைந்த நீ
காலம் முழுக்க உன் அன்பு எனக்கு மட்டும்தான் என்று
விண்ணப்பத்தில் கையொப்பம் வாங்கிட
என் மனம் நினைப்பது உண்டு...
கையொப்பம் எல்லாம் எதற்க்கு
உன் பாசம் என்னும் சொத்தை
எனக்கு உயில் எழுதி தந்த பிறகு
இதெல்லாம் எதற்க்கு..
ஆனாலும் நீ எனக்கு தந்த சொத்தை
மற்றவர் அனுபவிக்க விட
நான் ஒன்றும் பொது நலவாதி அல்ல.

என் கனவுகளை சிதைத்து விட்டாய்..



காதல் சாலையில் நான் பயணிக்கும் போது
உன்னையும் என்னையும் நம் வாழ்க்கையையும் பற்றி
ஆயிரம் கனவுகள் வளர்த்தேன் கலைந்து விடாமல்..

ஆனால் நீயோ வார்த்தை என்னும் கூரிய ஆயுதத்தால்
என் கனவுகளை சிதைத்து விட்டாய்
உன்னால் எனக்கு ஏற்பட்ட காயங்களுக்கு
என்னிடம் மன்னிப்பு கேட்காதே ஏன் என்றால்
உன்னை என் மனதில் குழந்தையாய் சுமக்கிறேனடா
கோழி மிதித்து குஞ்சு ஒரு போதும் இறப்பதில்லையடா

ஆனாலும் நான் ஆசையாய் வளர்த்த
என் கனவுகளை வார்த்தைகளால் கொலை செய்தாய்
இன்று என் கனவுகள் நினைவுகளில்
குற்றுயிராய் மரணித்து கொண்டு இருக்கின்றது
என் கனவுகள் மீண்டும் உயிர் பெற வேண்டுமா??
உன் இதயமும் அன்பான வார்த்தைகளும்தான்
என் கனவுகளுக்கு உயிர் கொடுக்கும் மருந்து

தயவு செய்து புரிந்து கொள் என் நினைவில் வாழும்
கனவுகளை கொன்று கொலைகாரன் ஆகிவிடாதே


Svr.pamini

svr.pamini

by svrpamini:

Free Blog Templates